நடிகர் ரோபோ ஷங்கர் இன்று தனது 22வது திருமண நாளில் ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சியில் மிமிக்கிரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’, ‘சிரிச்சாப் போச்சு’ போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

விஜயகாந்த், சிவாஜி கணேசன் போன்றோரில் உடல் மொழிகளை அப்படியே நடித்துக் காட்டி பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார் ரோபோ ஷங்கர். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடுவராகவும் பங்கேற்று அசத்தி வருகிறார்.

சின்னத்திரையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி வெள்ளித்திரைக்கு சென்ற அவர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் உடல் எடை குறைந்து காணப்பட்டது. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இவரது மனைவி மற்றும் மகளிடம் பலரும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது? என்று பல கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அவருக்கு உடல் நிலையில் ஏதோ பிரச்சனை என்றும் வதந்தி கிளம்பியது.

இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த ரோபோ ஷங்கர் அதிக அளவு குடியால் தனக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதாகவும் தற்போது குடியை நிறுத்திவிட்டு தான் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.

ரோபோ ஷங்கரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு பிரியங்கா என்பவருடன் திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில் மூத்த மகள் இந்திரஜாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் நடிப்பில் உருவான ‘விருமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்திரஜா ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா தொடர்ந்து தனது தாய் தந்தையருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் இன்று அவர் ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா ஷங்கரின் 22வது திருமண நாளுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

22வது திருமண நாளில் ரோபோ ஷங்கர், பிரியங்கா ஷங்கர், இந்திரஜா மற்றும் அவர ரோபோ ஷங்கரின் மருமகள் ஆகியோர் இணைந்து ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு தங்களது திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.