“கேப்டன் உடல்நிலையில் பின்னடைவு” மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை.!

தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கோலொட்சியவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு துருவங்கள் இருந்த நிலையில் தனக்கென தனி அடையாளத்துடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஏழைகளுக்கு அவர் செய்த தொண்டுகளையும் உதவிகளையும் பார்த்து ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். 2005ம் ஆண்டு ‘தேமுதிக’ என்கிற கட்சியை நிரவி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் களத்தில் முன் நின்று பணியாற்றினார்.

"கேப்டன் உடல்நிலையில் பின்னடைவு" மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை.! 1
முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்று திமுக அதிமுக போன்ற இரு துருவ கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அவருக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டது. அதிமுகவுடன் மோதல் போக்கை மேற்கொண்ட விஜயகாந்த், அடுத்தடுத்த தேர்தல்களில் பின்னடைவை மட்டுமே சந்தித்தார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது எம்எல்ஏக்களை அதிமுக தன்வசம் இழுக்கத் தொடங்கியது. அன்று தொடங்கி அவருக்கு சரிவு காலம் ஆரம்பித்தது. அதன் பின்னர் நடந்த ஒரு தேர்தலில் கூட தேமுதிகவால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மனமுடைந்து போன விஜயகாந்த் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீலிமாவை பார்த்து இன்ஸ்டாகிராமில் கொச்சையாக கேள்வி கேட்ட நபர்..தரமான பதிலடி கொடுத்த நீலிமா

"கேப்டன் உடல்நிலையில் பின்னடைவு" மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை.! 3

மேலும் அவருக்கு தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனை, தைராய்டு பிரச்சனை என்று பேச்சும் வராமல் போனது. இன்னும் சொல்லப்போனால் சக்கர நாற்காலையில் வரத் தொடங்கினார். தேமுதிக தொடக்க நாள், சுதந்திர தின விழா ஆகிய தினங்களில் தனது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்துவிட்டு தொண்டர்களை மட்டுமே அவ்வப்போது சந்தித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 11 நாட்கள் ஆன பின்னும் வீடு திரும்பவில்லை. ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார், வழக்கமான பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், இன்று வெளியாக இருக்கும் மருத்துவ அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

"கேப்டன் உடல்நிலையில் பின்னடைவு" மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை.! 5

மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு.விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவளது உடல்நிலை சீரான நிலையில் இல்லை. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவ மனதில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த கேப்டன் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment