தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பப்லு பிரிதிவிராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ஷீத்தல் என்பவரை பிரிந்து விட்டதாக தற்போது சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷீத்தல் செய்த செயலை பார்த்து ரசிகர்கள் இந்த தகவலை உறுதி செய்து இருக்கின்றனர். திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் துணை வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரித்திவிராஜ். இவரை ரசிகர்கள் பப்லு என அழைப்பது வழக்கம். சில வருடங்களுக்கு முன்னர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிம்புவுடன் இவர் மேற்கொண்ட மோதலுக்கு பின்னர் பிரபலமாக அறியப்பட்டார். தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் பிரித்திவிராஜ்.

57 வயதாகும் பிரித்விராஜ் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். இன்னமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் இவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. 23 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகன் இருந்த நிலையில் மனைவியை பிரிந்து விட்டு 23 வயது ஷீத்தல் என்கிற பெண்ணுடன் காதலில் விழுந்ததார். இந்த தகவலை பப்லுவே தனது காதலியுடன் தொலைக்காட்சிகளில் தோன்றி உறுதி செய்திருந்தார். தானும் ஷீத்தலும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், 30 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் நாங்கள் காதலித்து வருகிறோம் என்று அவர் பேட்டி அளித்திருந்தார்.

தொடர்ந்து இந்த ஜோடிகளின் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கி இருந்தது. இருவரும் சேர்ந்து சமைப்பது, நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது என இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். இதை பார்த்த 90ஸ் கிட்ஸ் பலரும், ‘“இதெல்லாம் ஓவராக இல்லையா” என்று சொல்லி கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஷீத்தல் தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து பிரித்விராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி இருக்கிறார். பொதுவாக பிரபலங்கள் பலரும் விவாகரத்திற்கு முன்னர் இவ்வாறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனவே ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ரசிகை ஒருவர் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா.? என்று எழுப்பிய கேள்விக்கு ஷீத்தல் லைக் போட்டுள்ளார் .எனவே பிரித்திவிராஜுடன் ஏற்பட்ட பிரிவினை அவர் உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஷீத்தல் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் இதை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்த விளக்கத்தை அவர்கள் இருவரும் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.