22 ஆண்டுகளுக்கு பின்னர் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகும் ‘ஆளவந்தான்’.! ட்ரைலர் உள்ளே..!

கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’ தற்போது மீண்டும் ரீலீஸ் செய்யப்படுகிறது. அதற்காக புது ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த 200ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தில் அனுஹாசன், பாத்திமா பாபு, ரவீனா டண்டன் என பல நடித்திருந்தனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் கமலஹாசன். காலத்திற்கு முன்பாகவே தொழில்நுட்பங்களை தனது படத்தில் புகுத்துவது கமல் படங்களுக்கே உரிய தனிச்சிறப்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்கு பின்னர் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகும் 'ஆளவந்தான்'.! ட்ரைலர் உள்ளே..! 1

விளம்பரம்

காலம் கடந்த பின்பும் கமலஹாசனின் படங்கள் வரவேற்பை பெறுவது வழக்கமாக இருக்கிறது. அதுபோலத்தான் தற்போது ரசிகர்கள் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தையும் டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்ற கலைப்புலி எஸ் தாணு படத்தை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி தற்போது வெளியிட இருக்கிறார். டிசம்பர் எட்டாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான ட்ரைலர் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

தொடர்புடையவை  விஸ்வரூபம் எடுத்த லட்டு விவகாரம்..! மன்னிப்பு கேட்ட நடிகர் Karthi..!

22 ஆண்டுகளுக்கு பின்னர் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகும் 'ஆளவந்தான்'.! ட்ரைலர் உள்ளே..! 3

விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடலை அனிமேஷன் முறையில் படக்குழு வெளியிட்டிருந்தனர். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. சைக்கோவாக ஒரு கமலஹாசனும், ஹீரோவாக மற்றொரு கமலஹாசனின் என்று ‘ஆளவந்தான்’ ட்ரைலர் மிரட்டலாக வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Kalaipuli S Thanu

விளம்பரம்

Leave a Comment