4 பெண்கள்.! 4 சூழல்.! வெவ்வேறு உலகம்.! ஒரே கதை.! அதிரடியாக வெளியானது ‘கண்ணகி’ ட்ரைலர்.!

‘குக் வித் கோமாளி’ பிரபலம் அம்மு அபிராமி, அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலினி ஆகிய நான்கு பெண்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கண்ணகி படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் யஸ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்கைமுன் என்டர்டெயின்மென்ட், மற்றும் இஎஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த படத்திற்கு மலையாள இசை அமைப்பாளர் ஷான் ரகுமான் இசையமைத்திருக்கிறார் .வருகிற 15ம் தேதி இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ட்ரைலர் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 பெண்கள்.! 4 சூழல்.! வெவ்வேறு உலகம்.! ஒரே கதை.! அதிரடியாக வெளியானது 'கண்ணகி' ட்ரைலர்.! 1
இந்த ட்ரைலர் வீடியோவைப் பார்க்கும் பொழுது வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் பெண்களைச் சுற்றி கதை நகர்கிறது. கணவனின் வற்புறுத்தலால் விவாகரத்திற்கு விண்ணப்பித்து நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் பெண்ணாக வித்யா பிரதீப்பும், பலமுறை பெண் பார்த்துவிட்டு சென்ற பின்பும் திருமணம் நடக்காமல் இருக்கும் பெண்ணாக அம்மு அபிராமியும், திருமண உறவின் மீது வெறுப்பால் லிவ்விங் டு கெதர்ரில் வாழ விரும்பும் ஷாலினும், வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைத்து பின்னல் நடக்காமல் போனதாக விரக்தியில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் என்று நான்கு வித்தியாசமான பெண்களின் கதையை சுற்றி இந்த ட்ரைலர் நகர்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

4 பெண்கள்.! 4 சூழல்.! வெவ்வேறு உலகம்.! ஒரே கதை.! அதிரடியாக வெளியானது 'கண்ணகி' ட்ரைலர்.! 3
தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment