பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது 63 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்றைக்கு 64வது நாளைக்கான ப்ரோமோ ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 10 போட்டியாளர்கள் வெளியேறியிருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பாராத விதமாக வனிதா மகள் ஜோவிகா வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். கன்டென்டே கொடுக்காத மணி, விக்ரம் போன்றவர்கள் வீட்டில் உள்ள இருக்கும் நிலையில் கன்டென்ட் கொடுத்து வந்த ஜோவிகாவை பிக் பாஸ் டீம் வெளியிட்டு இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நன்றாக விளையாடி வந்த ஜோவிகாவை எதற்காக வெளியேற்றினீர்கள்? இது நியாயமான வெளியேற்றமே இல்லை என்று சொல்லி பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்மால் பாஸ் வீட்டில் ரவீனா, பூர்ணிமா, விக்ரம், அனன்யா, விஜய் வர்மா ஆகியோர் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூறுகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரும் ஒன்றாக இணைந்து நிக்ஸனை மட்டும் நாமினேட் செய்கின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் 3வது ப்ரோமோவில், விஷ்ணுவும் அர்ச்சனாவும் எதோ பேசிக்கொண்டிருக்க, அதை ஸ்மால் பாஸ் வீட்டினர் கவனிக்காமல் கத்திக்கொண்டே இருக்கின்றனர். மேலும் நிக்ஸன் நாங்கள் அப்படி தான் கத்திக்கொண்டே இருப்போம் என்று திமிராக கூற விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வீட்டில் சண்டை பெரிதாகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television