தனது வீடு வெள்ளத்தில் மிதந்து வருவதாகவும், உதவிக்கு பலரை அழைத்தும் யாரும் முன் வரவில்லை என்றும், மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லை, இன்டர்நெட்டும் கிடைக்கவில்லை, மாடியில் வந்து இந்த பதிவை தான் பதிவிடுவதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கின்றன. அரசும் அரசு இயந்திரமும் வேகமாக செயல்பட்டதால் மீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் அறுந்து விழுந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முறிந்து விழுந்த மரங்களும் விரைவாக நீக்கப்பட்டு போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

திமுக அரசு பதவி ஏற்றது முதல் ரூ.4000 கோடி செலவில் மழை வடிநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டும், பல இடங்களில் ஏரிகள் தூர்வாரப்பட்டும் இருப்பதால் தற்போது வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் அதை சீர் செய்யும் பணிகளை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விஷால் தன் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருப்பதை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதேபோல நடிகர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு முன்னால் தண்ணீர் தேங்கி இருப்பதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை மாடியிலிருந்து புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது, காரப்பாக்கம் பகுதிகளில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நான் உதவிக்காக பலரை அழைத்தேன்.

மின்சாரம் இல்லை. wi-fi இல்லை, போனில் சிக்னல் இல்லை, எதுவுமே இல்லை, மாடியில் சில இடங்களில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கு விரைவில் உதவி கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். சென்னை மக்களை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். விரைவில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Water is entering my house and the level is rising badly in karapakkam
I have called for help
No electricity no wifi
No phone signal
Nothing
Only on terrace at a particular point i get some signal
Lets hope i and so many here get some help❤️
I can feel for people all over chennai… pic.twitter.com/pSHcK2pFNf— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023
Twitter Original Sorce From: Vishnu Vishal