பிக் பாஸ் வீட்டில் நேற்று தொடங்கிய அர்ச்சனா – நிக்சன் சண்டை இன்றும் தொடர்கிறது. அர்ச்சனாவை “வாயை மூடுடி, நீ எல்லாம் ஒரு பொண்ணே கிடையாது, இந்த வீட்டை விட்டு ஓடு நாயே” என்றெல்லாம் நிக்சன் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி இன்றுடன் 67 நாட்கள் நிறைவடைகிறது. இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐந்து பேர் நாமினேஷனில் இருந்தனர். சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் இருந்த நிக்சன் காப்பாற்றப்பட்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ‘கல்லூரி காலம்’ என்கிற டாஸ்க்கை பிக் பாஸ் வைத்திருந்தனர். அதில் உடற்கல்வி ஆசிரியராக வந்த நிக்சன் அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கி பல விஷயங்களை கூறினார். இதனால் நேற்றிலிருந்து அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே சண்டை தொடங்கி இருக்கிறது. அந்த சண்டை இன்று முற்றிப் போய் “வாடி போடி” என்று பேசும் அளவிற்கு வந்திருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வினுஷா பற்றி பேசியதை அர்ச்சனா கூற, இந்த விஷயம் பற்றி மறுபடியும் பேசாதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன் என நிக்சன் கோபப்படுகிறார். அதற்கு ‘கத்தாதே’ என்று அர்ச்சனா சொல்ல, ‘நீ அதை சொல்லாதே வாயை மூடுடி’ என நிக்சன் மீண்டும் கத்துகிறார்.

பின்னர் ‘மரியாதை பேசு’ என்று அர்ச்சனா கேட்க, ‘நீ எல்லாம் பொண்ணே இல்ல, கருமம், பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடுடி நாயே’ என்று அர்ச்சனாவே அடிக்க பாய்வது போல் செல்கிறார். அத்துடன் அந்த ப்ரோமோ முடிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television