சொருகிடுவேன்னு சொன்னியே? என் கண்ணுல சொருவு பாக்கலாம்? நிக்சனை ரவுண்டு கட்டிய கமல்.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கமலஹாசன் பேசும் பொழுது, “இங்கு தரம் இல்லாமல் நிறைய பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கமலஹாசன் கூறுகிறார். இதனால் இன்றைக்கான எபிசோடுகள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்களை நிறைவு செய்து இன்று 69வது நாளில் அடி எடுத்து வைக்கிறது. இன்னும் 30 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இந்த போட்டியில் பலர் தரக்குறைவான வார்த்தைகளும், கெட்ட வார்த்தைகளையும் அதிகம் பயன்படுத்துவது பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொருகிடுவேன்னு சொன்னியே? என் கண்ணுல சொருவு பாக்கலாம்? நிக்சனை ரவுண்டு கட்டிய கமல்.! 1
குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிக்சன் மற்றும் அர்ச்சனா சண்டை பார்ப்பவர்களை மிகவும் முகம் சுளிக்க வைத்தது. நிக்சனை தூண்டும் விதமாக அர்ச்சனா கருத்துக்களை கூறிக் கொண்டிருக்க, கோபத்தின் உச்சிக்கே சென்ற நிக்சன் அர்ச்சனாவை ‘வாடி போடி’ என ஒருமையில் கத்தியதுடன் ‘நாயே’ என்று பேசி மிகவும் தரக்குறைவாக நடத்தினார். மேலும் இனிமேல் இதுபோல தன்னை தூண்டும் விதமாக பேசினால் ‘சொருகி விடுவேன்’ என்று மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசினார். இதற்காக அவர் மன்னிப்பும் கூறவில்லை. இது பார்ப்பவர்களை மிகவும் முகம் சுளிக்க வைத்தது. நிகழ்ச்சியின் தரமே கெட்டுவிட்டதாக முன்னாள் போட்டியாளரும், இந்த சீசன் போட்டியாளராக இருந்த ஜோவிகாவின் தாயார் வனிதாவும் காட்டமாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "போதும் இதுக்கு மேல முடியாது.....அதிரடி முடிவெடுத்த பாக்கியலக்ஷ்மி..அதிர்ந்த குடும்பம்"!!

சொருகிடுவேன்னு சொன்னியே? என் கண்ணுல சொருவு பாக்கலாம்? நிக்சனை ரவுண்டு கட்டிய கமல்.! 3

தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இது குறித்து கேள்வி எழுப்பும் கமலஹாசன், “நிகழ்ச்சியில் தரம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து தர விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறுகிறார். அப்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதனால் இந்த வாரம் கண்டிப்பாக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment