பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல் விஷ்ணுவின் கேப்டன் எப்படி இருந்தது? என்று கமலஹாசன் கேட்க, பலரும் விஷ்ணுவின் கேப்டன் சரியில்லை என்ற ரீதியில் பதில் அளித்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் எழுந்து திமிராக பேசிக் கொண்டிருக்கும் விஷ்ணுவை கமலஹாசன் கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, பதில் அளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சுமார் 70 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 30 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் தற்போது பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. கேப்டனே ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு விளையாடியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து தற்போது கமல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது விஷ்ணு எழுந்து திமிராக பதில் அளித்துக் கொண்டிருந்த நிலையில், கடுப்பான கமலஹாசன் நான் இந்த குழுவுடன் பேசுவதில்லை, அந்த குழுவுடன் பேசுவதில்லை என்று சொல்வது சரியான தலைமைக்கு அழகே இல்லை என்று சொல்லி விஷ்ணுவை கமல் வசை பாடுகிறார்.

இதற்கு பதில் அளிக்க முடியாமல் விஷ்ணு திணறிக் கொண்டிருக்கிறார். அப்போது கமலஹாசன், “நீங்கள் சரியான தலைமைக்கு தகுதியானவராக தெரியவில்லை. பொறுப்பில்லாதவர்களை ஷாப்பிங்க்கு அனுப்பிய நீங்கள்தான் முதலில் ஷாப்பிங்கிற்க்கு சென்றிருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இதைக் கேட்ட விஷ்ணு பதில் அளிக்க முடியாமல் அப்படியே நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television