மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது 10 கோடிக்கு கார் வாங்கிய ரஜினிகாந்த் மகள்..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை மக்கள் புயல் வெள்ளத்தில் தவித்து வரும் பொழுது ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா 10 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உயர் ரக கார் ஒன்றை வாங்கி அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலரும் வெள்ள நிவாரணத்திற்கு உதவாமல் இப்படி கார் வாங்கி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ‘மிக்ஜாம்’ புயல் சென்னையையே ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு ஒரே நாளில் பெய்து இருந்ததால், சென்னையே வெள்ளைக்காடாக மாறிப் போயிருந்தது. வடிகால் பணிகள் முடிந்த பல இடங்களில் சில மணி நேரத்திலேயே தண்ணீர் வடிந்தது. ஆனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.

மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது 10 கோடிக்கு கார் வாங்கிய ரஜினிகாந்த் மகள்..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்.! 1
குறிப்பாக வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. படுப்பதற்கு இடமில்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு மக்கள் பலரும் தவித்து வந்தனர். மேலும் உண்ண உணவு, உடுக்கை உடை, குடிப்பதற்கு பால் என்று எந்த அத்தியாவசிய பொருளுமே இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்தனர். இதை பார்த்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், சிவகார்த்திகேயன் போன்றோர் நிதியுதவி அளித்த நிலையில் நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நேரில் சென்று உணவு பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்கியும் மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல், ரஜினி என யாருமே முதலமைச்சரின் வெள்ள நிவாரணத்திற்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  என்ன மனுஷன்யா..! வயநாடு மக்களுக்கு நிதியுதவியை அள்ளிக்கொடுத்த நடிகர் பிரபாஸ்..! எவ்வளவு தெரியுமா?

மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது 10 கோடிக்கு கார் வாங்கிய ரஜினிகாந்த் மகள்..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்.! 3
எப்பொழுதுமே நடிகர் ரஜினிகாந்த் மீது இவ்வாறு விமர்சனம் எழுந்த பின்பு அவர் உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் மீது இத்தனை நாட்களாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் அவர் வெள்ள நிவாரணத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யாத நிலையில், அவரது மகள் சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் 10 கோடி மதிப்பிலான உயர்ரக லம்போர்கினி கார் ஒன்றை அவரது கணவர் வாங்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் சௌந்தர்யா் இதைப் பார்த்த பலரும், “இவ்வளவு பணம் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே? புயல் வெள்ளத்தில் மக்கள் கஷ்டப்படும் பொழுது நீங்கள் கார் வாங்கி போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களே? மக்களுக்கு கொடுத்து உதவலாமே?” என்று தங்கள் ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர்.!

மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது 10 கோடிக்கு கார் வாங்கிய ரஜினிகாந்த் மகள்..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்.! 5
தொடர்ந்து இது போன்ற எதிர்ப்பு கமெண்டுகள் வந்ததால் கமெண்ட் பகுதியக ஆஃப் செய்திருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment