பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் ரெடின் க்ங்ஸ்லி திருமணம் செய்து கொண்டது பற்றி தற்போது பயில்வான் ரங்கநாதன் புது தகவலை கூறியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அரசு கண்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ரெடின் க்ங்ஸ்லி. இவர் பனிமலை, பனி லிங்கம் போன்று பொருட்காட்சி அமைப்பதில் வல்லவராக இருந்தவர். நடிகர் அஜித்தின் ‘அவள் வருவாளா’ படத்தில் டான்ஸராக அறிமுகமான இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெல்சன் கூட்டணியில் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலமாக திரையுலகருக்கு அறிமுகமானார். அதன் பின்னர் ‘எல்கேஜி’, ‘டாக்டர்’, ‘அண்ணாத்த’, ‘பீஸ்ட்’, ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்திலும், ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்திலும் பிஸியாக நடித்த வருகிறார். மேலும் கவின் நடித்து வரும் ஒரு படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மைசூரில் நடந்து வரும் நிலையில் நேற்று அவருக்கு திடீரென திருமணம் முடிந்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட அவர் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருந்தார். மைசூரில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரானது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திரை பிரபலங்களும் கலந்து கொள்ளாமல் திடீரென திருமணம் செய்து கொண்டது குறித்து தற்போது பயில்வான் சில ரகசியங்களை கூறியிருக்கிறார்.

அதில் அவர், “46 வயதாகும் கிங்ஸ்லிக்கு இது முதல் திருமணமா? அல்லது இரண்டாவது திருமணமா? என்று எனக்கு தெரியாது. நடிகை சங்கீதாவை சில ஆண்டுகளாக அவர் காதலித்து வந்துள்ளார். தான் அவரிடம் பேசியபோது நடிகையை காதலித்து வந்ததாகவும், திடீரென அவர் மைசூரில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து தன்னிடம் இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டும், உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்த நிலையில் அங்கேயே வைத்து திருமணத்தை செய்திருப்பதாகவும் கிங்ஸ்லி கூறியதாக பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: