விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் லோடு ஏற்றி வந்த வண்டியை அர்ஜூன் ஆட்களை வைத்து திருடி விடுகிறார். ஆனால் அந்த வண்டியை மேகனா காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறார். இதை பார்த்த தமிழ், தற்போது மேகனாவை கட்டிப்பிடித்து தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் கதையை மாற்றுமாறு இயக்குனருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தற்போது தமிழுக்கும், தொழிலதிபர் மேகனாவிற்கும் காதல் மலர்வது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கதைக் களத்தை ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை. தயவு செய்து கதையை மாற்றுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் ஆர்டர் செய்து கொண்டு வந்த லோடு வேனை அர்ஜுன் ஆட்களை வைத்து கடத்தி விடுகிறார். அந்த வேனை சரியான சமயத்தில் காப்பாற்றி மேகனா கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இதை பார்த்த தமிழ் நெகிழ்ந்து போய் மேகனாவை கட்டிபிடித்துக் கொள்கிறார். இதை நமச்சி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் சரஸ்வதிக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ரசிகர்கள் இரண்டு பொண்டாட்டி கதையை மாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.! நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television