‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் வில்லி நடிகைக்கு அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்.! என்ன விஷயம் தெரியுமா.?

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிககைக்கு, மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது கதைப்படி அர்ஜுனை போலீசார் கைது செய்து அவரது கம்பெனியை சீல் வைக்கின்றனர். இதனால் அர்ஜுனனின் மனைவி ராகிணி தனது சொந்த அண்ணன் மற்றும் குடும்பத்திற்கு எதிராகவே திரும்புவது போல கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லன் அர்ஜுனனின் அக்காவாக ஜெயந்தி என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுவாதிகா.

'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் வில்லி நடிகைக்கு அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்.! என்ன விஷயம் தெரியுமா.? 1

விளம்பரம்

தம்பிக்கு பக்கபலமாக இருந்து அவ்வபோது ஐடியாக்களையும் கொடுத்து தனது சிறந்த வில்லத்தனங்களை வெளிப்படுத்தி மக்களின் விமர்சனங்களை பெற்று வருகிறார். துணை நடிகையாக இருந்த இவருக்கு தற்போது புதிதாக தொடங்க இருக்கும் ‘சக்தி ஐபிஎஸ்’ என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு சிறு நகரத்தில் பிறந்த பெண் ஒருவர், தனது ஐபிஎஸ் கனவை எப்படி நிறைவேற்றுகிறார்? அதற்காக அவர் எதிர்கொள்ளும் தடைகள் என்ன? என்பது குறித்து இந்த நாடகத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுவாதிகா தற்போது இந்த நாடகத்தின் பூஜை தொடங்கியதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின் முதல் வீடியோவை வெளியிட்ட VJ மகேஸ்வரி.!

'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் வில்லி நடிகைக்கு அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்.! என்ன விஷயம் தெரியுமா.? 3

விளம்பரம்

மாடலாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, விளம்பர படங்களில் நடித்து, பின்னர் பல தொடர்களில் துணை வேடங்களில் நடித்திருக்கும் இவர் ‘பரம்பொருள்’ என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இவருக்கு ‘சக்தி ஐபிஎஸ்’ என்கிற தொடர் மூலமாக சின்னத்திரையில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நாடகத்தை பிரபல இயக்குனராக இருக்கும் சுரேஷ் கிருஷ்ணா இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சுவாதிகா செந்தில்குமாருக்கு ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நடித்து வரும் நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நட்சத்திரா, “உண்மையிலேயே இதற்கு தகுதியானவர் நீங்கள் நான் பணியாற்றிய மிகச்சிறந்த மற்றும் குறைந்த மதிப்பிட்ட நடிகைகளில் நீங்களும் ஒருவர், உங்களுக்கு வானமே எல்லை” என்று சொல்லி வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் வில்லி நடிகைக்கு அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்.! என்ன விஷயம் தெரியுமா.? 5

விளம்பரம்

விரைவில் ஹீரோயினாக களமிறங்க இருக்கும் சுவாதிகா செந்தில்குமாருக்கு ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்தத் தொடர் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது? யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Swathika S (@swathika.senthilkumar)

விளம்பரம்

Instagram Video Credits: Swathika Senthilkumar

விளம்பரம்

Leave a Comment