சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது மகனை தனது அண்ணனுக்கு தத்து கொடுத்து விட்டதாக உணர்ச்சிபூர்வமான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் வில்லி சீரியல்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் நிறைவடைந்த ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் ஐந்து மருமகள்களில் ஒருவராக நடித்து வந்தார்.

உடல் எடை ஏறியதால் சீரியல் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியல் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த சீரியலின் மூலமாக மீண்டும் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வந்தார் கிருத்திகா. இந்த நிலையில் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் திருமணமான சில நாட்களிலேயே இவருக்கு விவாகரத்து நடைபெற்றது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டதாக கூறியிருக்கிறார். தன்னுடைய விவாகரத்து குறித்து பேசிய அவர், “திருமணம் ஆனதிலிருந்து பல பிரச்சினைகள் கணவன் மனைவிக்குள் வந்தது.பின்னர் பேசி விவாகரத்து முடிவை இருவரும் இணைந்து எடுத்தோம்.

ஆனால் அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை என்னுடைய மகன் தான். பிற்காலத்தில் யாராவது தந்தை குறித்து கேள்வி எழுப்பினால் அவன் சங்கடப்படுவான் என்று சொல்லி மிகவும் வருந்தினேன். தற்போது என்னுடைய அண்ணனுக்கு என் மகளை தத்து கொடுத்து விட்டேன். அவர்தான் இப்போது அப்பாவாக இருந்து அவனை வழி நடத்தி வருகிறார். எனவே எனக்கு தற்போது என் மகன் குறித்த கவலையும் இல்லை” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். மேலும் அண்ணன், அண்ணி, அவர்களுடைய குழந்தைகள், தன்னுடைய தாயார் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கிறோம்.

என்னுடைய தாயார் என்னை மறுமணம் செய்து கொள்வதற்கு வற்புறுத்துகிறார். ஆனால் ஒரு பேயிடமிருந்து தப்பித்து பிசாசிடம் சென்று மாட்டிக்கொள்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.