பாண்டியன் ஸ்டோர்ஸ் புது வீட்டை சுத்தி பாக்கலாமா? புது வீட்டின் Home Tour வீடியோ.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது கதைப்படி அந்த வீட்டிலிருந்து அவர்கள் அனைவரும் வெளியேறி இருக்கின்றனர். இதனால் அனைவரும் கதிர் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கின்றனர். இனி கதை எப்படி நகரப் போகிறது என்கிற சஸ்பென்ஸுடன் நகர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையப்படுத்தியும், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை விளக்கும் நாடகமாக இது இருந்து வருகிறது. ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது வரும் சண்டைகளும், அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கும் ஒரு தொடராக இந்த கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புது வீட்டை சுத்தி பாக்கலாமா? புது வீட்டின் Home Tour வீடியோ.! 1

விளம்பரம்

வீட்டில் தொடர்ந்து சண்டைகள் நடந்து வரும் காரணத்தினால் மூர்த்தி மிகவும் கவலை கொள்கிறார். அவர் கனவில் இறந்து போன அவரது தாயார் வந்து இந்த வீட்டை விற்று விட்டு வேறு வீட்டிற்கு செல்லுமாறு கூறுகிறார். அதன்படி வீட்டை விற்க முடிவெடுத்த மூர்த்தி பலரிடம் தேடி அலைந்தும் யாரும் வீட்டை வாங்க முன் வரவில்லை. பின்னர் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் இந்த வீட்டை தானே வாங்கிக் கொள்வதாக கூறுகிறார். முதலில் தயங்கிய மூர்த்தியை மீனா வலுக்கட்டாயமாக சமாதானப்படுத்தி, அந்த வீட்டை அவரது தந்தைக்கு விற்கும் படி செய்து விட்டார். தற்போது ஜனார்த்தனன் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லி சண்டை போடுகிறார்.

தொடர்புடையவை  சுனிதாவுடன் அஸ்ஸாமுக்கு சென்ற சந்தோஷ் பிரதாப்.! ஹோட்டலுக்கு சென்று செம்ம அலப்பறை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் புது வீட்டை சுத்தி பாக்கலாமா? புது வீட்டின் Home Tour வீடியோ.! 3

விளம்பரம்

மூர்த்தி புது வீடு கட்டும் வரை பழைய வீட்டிலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தார். ஆனால் ஜனார்த்தனன் நீ புது வீடு கட்டும் வரை இந்த வீட்டிலேயே ஓசியில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறாயா முழு பணத்தையும் கொடுத்தாகி விட்டதே வீட்டை காலி செய்து விடு என்று சண்டை போடுகிறார். இதனால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தி கதிரின் வீட்டிற்கு செல்கிறார். கதிரின் வீட்டில் தான் இனிமேல் சில காலத்திற்கு சூட்டிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஷூட்டிங் நடைபெறும் இடத்தை தற்போது தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா சுற்றி காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Kathakelu Kathakelu

விளம்பரம்

Leave a Comment