விஷ்ணுவின் சகோதரி பற்றி புறணி பேசத் தொடங்கிய மாயா, பூர்ணிமா நிக்சன்.! ப்ரோமோ இதோ.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி இருக்கிறது. அதில் உள்ளே வந்த விஷ்ணுவின் சகோதரி தங்களை பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறார் என்று சொல்லி மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது 80 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இன்னும் 20 நாட்களே மீதம் இருப்பதால் பரபரப்பான பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பொம்மை ஃபேக்டரி, ஸ்வீட் ஃபேக்டரி, சொர்கம் – நரகம் போன்ற டாஸ்க்குகள் இல்லாமல், சுவாரஸ்யமே இல்லாமல் இந்த சீசன் நடந்து முடிய இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் சகோதரி பற்றி புறணி பேசத் தொடங்கிய மாயா, பூர்ணிமா நிக்சன்.! ப்ரோமோ இதோ.! 1
இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் வரும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. நேற்றைய தினம் பூர்ணிமாவின் தாயார், விஜய் வர்மாவின் தாயார், சரவண விக்ரமின் பெற்றோர்கள், அர்ச்சனாவின் பெற்றோர்கள் என்று நான்கு போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருகை தந்திருக்கின்றனர். இன்றைய தினம் நிக்சனின் தந்தை மற்றும் விஷ்ணுவின் சகோதரி, தினேஷின் பெற்றோர்கள், மணியின் தாயார் ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். உள்ளே வந்த அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு புத்திமதி கூறி வருகின்றனர். குறிப்பாக விஷ்ணுவின் சகோதரி பூர்ணிமாவிடம் நெருங்கிப் பழகாதே என்று அறிவுரை கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வீட்டை விட்டு வெளியேறினார் ஆயிஷா.! இந்த வாரம் நடந்த இரண்டாவது எலிமினேஷன்.!

விஷ்ணுவின் சகோதரி பற்றி புறணி பேசத் தொடங்கிய மாயா, பூர்ணிமா நிக்சன்.! ப்ரோமோ இதோ.! 3
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் விஷ்ணுவின் சகோதரி பற்றி புறம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment