நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் வருகிற ஜனவரி 12ம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் ஹிந்தி பதிப்பில் நடிக்க, தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெ. பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர்.

ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலா சேகர் ஆகியோர் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு பதிப்புகளிலும் தங்களது பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். டைம் ட்ராவலர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tips Tamil