பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில் சரவணன் விக்ரமின் தங்கை வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் தற்போது மாயாவின் உண்மை முகத்தை சரவணனிடம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி இன்று 81வது நாளை நிறைவு செய்ய இருக்கிறது. இன்னும் 20 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் என்று அழைக்கப்படும் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டில் உள்ளே வரும் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இதுவரை மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, சரவண் விக்ரம், விஜய்வர்மா, மணி, தினேஷ் ஆகியோரின் பெற்றோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றும் சிலர் வருகை தந்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று ரவீனாவின் அண்ணன் மற்றும் தோழியின் அம்மா, மாயாவின் பெற்றோர்கள் மற்றும் சகோதரி, சரவணன் விக்ரமின் தங்கை சூர்யா ஆகியோர் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இதில் சரவண விக்ரமின் தங்கை தற்போது விக்ரமுக்கு சில அறிவுரைகளை கூறிக் கொண்டிருக்கிறார். அதில், “மிகவும் நல்லவனாக இருக்காதே, நீ மனதில் இருந்து விளையாட கூடாது, மூளையிலிருந்தும் வாயிலிருந்து தான் விளையாட வேண்டும். அப்போதுதான் இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும். நான் சென்ற பிறகு என் தங்கை ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று ஒவ்வொருவரிடமிருந்து போய் மன்னிப்பு கேட்காதே.

அதேபோல் நீ நண்பர்களாக நினைக்கும் சிலர் உனக்கு உண்மையில் நண்பர்கள் கிடையாது. அவர்கள் பின்னால் போய் உன்னை பற்றி தவறாக பேசுகின்றனர். குறிப்பாக மாயா நீ 5 ஸ்டார் வென்ற போது, இவனுக்கு எல்லாம் எதற்கு ஐந்து ஸ்டார்? என்று மிகவும் கேவலமாக பேசினார் என்று மாயாவின் உண்மை முகத்தை போட்டு உடைக்கிறார். அதைக் கேட்ட சரவணன் விக்ரம் மாயாவா இப்படி பேசியது? என்ற பீதியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television