விஜய்க்காக நிகழ்ச்சிக்கு வந்த காவேரி.! காவேரி மீது விஜய்க்கு வந்த காதல்.! Cute ப்ரோமோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் மற்றும் காவேரி ஜோடி தற்போது ஒன்றாக இணைந்துள்ளனர். விஜய் சிறப்பு விருந்தினராக சென்ற ஒரு நிகழ்ச்சியில் அவரது மனைவி என்ற அடையாளத்துடன் காவேரி பங்கெடுத்து இருக்கிறார். “நான்கு சகோதரிகளின் கதை” என்கிற அடையாளத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ‘மகாநதி’ சீரியல். ஒளிபரப்பாகத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக மாறிப்போனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய்க்காக நிகழ்ச்சிக்கு வந்த காவேரி.! காவேரி மீது விஜய்க்கு வந்த காதல்.! Cute ப்ரோமோ.! 1

விளம்பரம்

இந்த சீரியலின் கதைப்படி கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்கிற நான்கு சகோதரிகளின் தந்தையை அவரது நண்பர் பசுபதி என்பவர் ஏமாற்றி அவரின் சொத்துக்களை அபகரித்து விட்டு நான்கு சகோதரிகளையும் நடுத்தெருவில் விடுகிறார். இதனால் ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்புக்காக நான்கு பேரும் செல்கின்றனர். இதில் மூத்த மகளாக இருக்கும் கங்காவுக்கும் அவரது அத்தை மகன் குமரனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அதேபோல் காவிரி விஜய் என்பவரை விதிவசத்தால் ஒரு வருடம் ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார்.

தொடர்புடையவை  யோவ் வீட்டை விட்டு வெளிய போயா.! விக்ரமனிடம் மீண்டும் தன் சுய ரூபத்தை காட்டிய அசீம்.!

விஜய்க்காக நிகழ்ச்சிக்கு வந்த காவேரி.! காவேரி மீது விஜய்க்கு வந்த காதல்.! Cute ப்ரோமோ.! 3

விளம்பரம்

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜய் தன்னுடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மனைவியாக வருமாறு கேட்கிறார். ஆனால் எனக்கு ஒரு வேலை போட்டு தருகிறேன் என்று சொன்னால் வருவதாக காவேரி கூறுகிறார். ஆனால் விஜய் தேவையில்லை என்று கிளம்பி செல்கிறார். ஆனால் காவேரி விஜய்க்கு சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுக்கிறார். அந்த Cute ஆன ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment