‘மீனா சாப்பிட்டாளான்னு யாராச்சும் கேட்டீங்களா?” மீனாவை கண் போல பார்த்துக்கொள்ளும் முத்து.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தனது மனைவியை முத்து விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார். முத்துவின் இந்த செயலைப் பார்த்த மீனா நெகிழ்ச்சியில் உறைந்து போகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மீனா வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.்அவரை மருமகளாகவே முத்துவின் தாயார் விஜயா நடத்துவதில்லை. ஒரு வேலைக்காரியை போலத்தான் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து மீனாவிடம் என்ன சாப்பாடு செய்தாய்? என்று கேட்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'மீனா சாப்பிட்டாளான்னு யாராச்சும் கேட்டீங்களா?" மீனாவை கண் போல பார்த்துக்கொள்ளும் முத்து.! 1
அதற்கு மீனா ஸ்ருதிக்கு சிக்கன் சூப் செய்தேன், அத்தைக்கும் மாமாவிற்கும் கீரை கடைந்து வைத்திருக்கிறேன். ரவிக்கும் உங்க அண்ணனுக்கும் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் பண்ணி இருக்கிறேன் என்று கூறுகிறார். எல்லாருக்கும் எல்லாம் பண்ணி இருக்க? உனக்கு என்ன பண்ணி இருக்க? என்று கேட்க, “வேலை பண்ணி இருக்கேன்” என்று மீனா சொல்கிறார். இதைக் கேட்ட முத்து மனம் உடைந்து போய் தனது மனைவிக்காக கடைக்கு சென்று தந்தூரி சிக்கன் வாங்கிக்கொண்டு வருகிறார். அப்போது வீட்டில் மனோஜ் ஏதோ மசாலா வாசம் வீசுகிறது என்று சொல்ல, “நான் என் மனைவிக்காக தந்தூரி சிக்கன் வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறுகிறார். அதற்கு விஜயா இது என்ன புதிதாக இருக்கிறது? என்று அண்ணாமலையிடம் புகார் கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்க சொல்றது எல்லாம் கேக்க முடியாது, சண்டை மூட்டி விட்ட பிக்பாஸ், அடித்துகொள்ளும் ஹவுஸ்மேட்ஸ் | BiggBoss Ultimate Mar07 Promo1

'மீனா சாப்பிட்டாளான்னு யாராச்சும் கேட்டீங்களா?" மீனாவை கண் போல பார்த்துக்கொள்ளும் முத்து.! 3

அப்போது முத்து இங்கு அவரவர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கிறது. ஆனால் அவளுக்கு என்ன வேண்டும் என்று யாருமே கேட்கவில்லையே என்று சொல்லி தனது மனைவிக்காக சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment