நடிகர் நெப்போலியன் தனது காதல் மனைவியின் 51வது பிறந்த நாளை வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தானும் ஒரு நடிகராக வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து 1991ம் ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘ஊர் மரியாதை’, ‘எஜமான்’, ‘கிழக்கச் சீமையிலே’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’ என்று இவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து அசத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இருந்தும் முழுவதுமாக விலகி அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். தனது மூத்த மகனின் சிகிச்சைக்காக சென்ற அவர் அங்கேயே ஒரு பண்ணை நிலத்தையும், மிகப் பிரமாண்டமான வீட்டையும் வாங்கி அங்கேயே குடியமர்ந்து விட்டார். அவரின் பண்ணை நிலத்தின் வீடியோக்கள் மற்றும் ஹோம் டூர் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் தனது மனைவி சுதாவுடன் இணைந்து அவர் ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும் மனைவி சுதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி அவர் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த அவர், “தன்னுடைய மனைவியின் 51-வது பிறந்த நாளை அவரின் அண்ணன் அண்ணி மற்றும் எங்களுடைய குடும்பத்தினருடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள வீட்டில் கொண்டாடினோம்” என்று பகிர்ந்து இருக்கிறார். பலரும் நெப்போலியன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram
Instagram Source: Nepoleon Duraisamy