பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சரவண விக்ரம் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் விக்ரம் ஒரே ஒருவருக்கு மட்டும் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். தமிழ் சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி 86 நாட்களை முடித்து விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 23 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 10 பேர்கள் மீதம் விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சரவண விக்ரம் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.! 1

விளம்பரம்

இன்னும் இரண்டு வாரங்களே மீதம் இருப்பதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. பின்னர் அதற்கு அடுத்த வாரம் மூன்று பேரை வெளியேற்றிவிட்டு, ஐந்து பேரை இறுதி மேடைக்கு அழைத்துச் செல்ல பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்து என்ன நடக்கும் யார் வெளியேறப் போகிறார்கள்? என்று கணிக்கவே முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக நிறைய மாற்றங்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டுமே நாமினேட் ஆன நிலையில் குறைவான வாக்குகளை பெற்று சரவணன் விக்ரம் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தொடர்புடையவை  கோபிக்கு கண்கலங்கி நன்றி சொன்ன பாக்யா.! நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல ப்ரோமோ..!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சரவண விக்ரம் வெளியிட்ட முதல் உருக்கமான பதிவு.! 3

விளம்பரம்

டிக் டாக் மற்றும் youtube செயலியின் மூலமாக பிரபலமான சரவணன் விக்ரமுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுக. கொடுத்தது. இதில் மூர்த்தியின் கடைசி தம்பியாக நடித்து பலரின் மனங்களில் இடம் பிடித்திருந்தவர் தான் சரவணன் விக்ரம். இவருக்கு பிக் பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். எந்த சண்டையிலும் பேசாமல் மிக அமைதியான தன்னுடைய சுபாவத்தை வெளிப்படுத்தி வந்த இவர் 84 நாட்கள் தாக்குப்பிடித்து வீட்டில் இருந்தார். ஆனால் 85வது நாள் இவரை வீட்டிலிருந்து வெளியேற்றி இருந்தனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் குழுவினருக்கு மட்டும் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

விளம்பரம்

அதில், “எனக்கு இத்தனை நாட்களாக தொடர்ந்து ஆதரவையும் வழிகாட்டுதலையும், என்னுடைய வளர்ச்சிக்கு சரியான பாதையையும் காட்டிய திரு.கமலஹாசன் அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றிகள். உங்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும். நீங்கள் என்னுடைய உண்மையான இன்ஸ்பிரேஷன்” என்று பதிவிட்டு இருக்கிறார். அதன் பின்னர் மற்றொரு வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர், “என்னுடைய உருக்கமான நன்றியை பிக்பாஸுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடினமான காலங்களில் இருந்தபோது என்னை ஆதரித்தமைக்கு மிக்க நன்றி. இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய பிக்பாஸிற்கு நன்றி.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

விளம்பரம்

மேலும் இதில் பணியாற்றிய எடிட்டர்கள் முதல் அனைத்து கன்டென்ட் டைரக்டருக்கும் தன்னுடைய நன்றி. உங்களுடைய முயற்சி உண்மையிலேயே பாராட்டக் கூடியது” என்று பகிர்ந்து இருக்கிறார். பலரும் சரவண விக்ரமின் இந்த பதிவிற்கு கீழே, “நீங்கள் நேர்மையாக விளையாடினீர்கள். விளையாட்டுக்குக் கூட யார் மனதையும் நீங்கள் காயப்படுத்த வில்லை. நீங்கள் நல்ல விளையாட்டை வெளிப்படுத்தினீர்கள். கவலை வேண்டாம் உங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.!

விளம்பரம்

Leave a Comment