விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ரோகிணியின் தந்தை குறித்து முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. இது குறித்து அவர் ரோகினியிடம் கேட்டுக் கொண்டிருக்க, அண்ணாமலை தனக்கும் அந்த சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். இதனால் விரைவில் ரோகினி மாட்ட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியின் பிரபல சீரியல் தான் ‘சிறகடிக்க ஆசை’. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது இந்த சீரியல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் அண்ணாமலையின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் மூத்த மகனின் மனைவியாக இருப்பவர் ரோகிணி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கும் நிலையில் மனோஜை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். இந்த விஷயம் குடும்பத்தில் இருக்கும் யாருக்குமே தெரியவில்லை. மேலும் தனது தந்தை மலேசியாவில் இருப்பதாகவும் அவர் பொய் சொல்லுகிறார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் விஜயாவிற்கு ரோகிணி குறித்த உண்மைகள் விஜயா மற்றும் அண்ணாமலைக்கு தெரிய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ரோகிணியின் தந்தை குறித்து முத்து அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். அப்போது விஜயா அவர் குறித்தெல்லாம் எதற்கு நீ கேள்வி கேட்கிறாய்? என்று அவரை தடுக்கிறார். அப்போது அண்ணாமலை தனக்கும் ரோகிணியின் தந்தை குறித்து சந்தேகம் இருப்பதாகவும், அவர் எப்போதுதான் வருவார்? இல்லை இங்கு வரவே மாட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார் விரைவில் உன்னை முகம் விஜயாவிற்கு தெரிய வந்து அவர் அசிங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண்.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television