திறமையை மதிக்க தெரியாத அளவுக்கு நீங்க என்ன பப்பாவா.? ரவீனாவை ரவுண்டு கட்டிய கமல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரவீனாவை நிற்க வைத்து கமல் கடுமையான கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.கமலின் கேள்விகளை பதில் அளிக்க முடியாமல் ரவீனாவும் மணியும் திணறிக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் மணிக்கு தனக்கு கொடுக்கப்பட்ட ரூ.5000 ரூபாய் பணத்தையும் வாரி வழங்கியிருந்தார் ரவீனா. இதனால் பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் எழுந்தன. ரவீனாவை பார்த்து பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு பணத்தை கொடுத்ததன் மூலமாக பிக் பாஸின் கோபத்திற்கும் ஆளாகினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திறமையை மதிக்க தெரியாத அளவுக்கு நீங்க என்ன பப்பாவா.? ரவீனாவை ரவுண்டு கட்டிய கமல்.! 1
மணி மற்றும் ரவீனா இருவரும் வெளியிலிருந்து காதலித்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் இருவரும் செய்யும் வேலைகள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தான் மணிக்காகத்தான் விளையாடுகிறேன், மணி ஜெயித்தால் போதும் என்று பல இடங்களில் ரவீனா செய்யும் வேலைகள் பார்க்கும் ரசிகர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கமலஹாசன் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கமலஹாசனுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் கமல் இதுவரை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கமலஹாசன் ரவீனாவை கடுமையாக கேள்வி எழுப்புகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தீனா திருமண வரவேற்ப்பில் தங்க மோதிரம் பரிசு கொடுத்த KPY பாலா..! அவரே வெளியிட்ட வீடியோ.!

திறமையை மதிக்க தெரியாத அளவுக்கு நீங்க என்ன பப்பாவா.? ரவீனாவை ரவுண்டு கட்டிய கமல்.! 3
மொத்த பணத்தையும் மணிக்கு தூக்கிக் கொடுப்பது உங்களுக்கு ஃபேவரிட்சமாக தெரியவில்லையா? மற்றவர்களின் திறமையை நீங்கள் கொஞ்சம் கூட மதிக்கவில்லையா? அந்த விவரம் கூட தெரியாத அளவிற்கு நீங்கள் என்ன அவ்வளவு சின்ன குழந்தையா? என்று ரவீனாவை கேள்விகளால் வெளுத்து வாங்குகிறார் கமலஹாசன். கமலின் இந்த செயலை பலரும் வரவேற்று வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment