நடுக்கடலில் படகில் மாட்டிக்கொண்ட 10 பேர்.! சுற்றி வளைத்த சுறா.! ‘போட்’ படத்தின் டீசர் இதோ.!

நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை இந்தியா முழுவதிலும் உள்ள ஐந்து பெரிய நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். டீசர் வெளியாகி ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரை உலகின் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் நடிப்பில் கடலில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘போட்’. 2006ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகில் மாட்டிக்கொண்ட 10 பேர்.! சுற்றி வளைத்த சுறா.! 'போட்' படத்தின் டீசர் இதோ.! 1

விளம்பரம்

பிரபல இயக்குனர் சேரனின் ‘வெற்றி கொடி கட்டு’ படத்தில் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அவர், 2006ம் ஆண்டு ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ போன்ற பல நல்ல படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் விஜயை வைத்து இயக்கிய ‘புலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகர் யோகி பாபுவை வைத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘போட்’.

தொடர்புடையவை  நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.!

நடுக்கடலில் படகில் மாட்டிக்கொண்ட 10 பேர்.! சுற்றி வளைத்த சுறா.! 'போட்' படத்தின் டீசர் இதோ.! 3
நெய்தல் நிலமான கடலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெறுகிறது. டீசரை ஹிந்தியில் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப் தெலுங்கில் நாக சைய்தன்யா, தமிழில் விஜய் சேதுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் என்று இந்தியாவின் முன்னணி நடிகர்களை வைத்து வெளியிடப்பட்டுள்ளது. டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment