‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் எதிர்பார்க்காத வருகை..! இனி பாட்டியின் ஆட்டம் ஆரம்பம்..!

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நீண்ட நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்த அண்ணாமலையின் தாயார் கதாபாத்திரத்தை மீண்டும் கதைக்குள் இறக்கி இருக்கின்றனர். மீண்டும் சீரியலுக்குள் வந்த பாட்டி மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை – விஜயா தம்பதிகளுக்கு மனோஜ், முத்து மற்றும் ரவி என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்குமே திருமணமாகிவிட்டது. மூவரின் திருமணத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'சிறகடிக்க ஆசை' சீரியலில் எதிர்பார்க்காத வருகை..! இனி பாட்டியின் ஆட்டம் ஆரம்பம்..! 1
இருப்பினும் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். கதை பல திருப்பங்களுடன் நடந்து வரும் நிலையில் இத்தனை நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்த அண்ணாமலையின் தாயார் கதாபாத்திரம் தற்போது சீரியலுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறது. உள்ளே வந்த பாட்டி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர் தனது மகன் அண்ணாமலையிடம் எனக்கு மூன்று பேரன்களை கொடுத்தாய், அவர்களுக்கும் தற்போது மனைவிகளும் வந்துவிட்டனர். எப்போது எனக்கு கொள்ளு பேரன்களை கொடுக்கப் போகிறாய்? என்று அண்ணாமலையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  விக்ரம் பட நடிகை காயத்ரியுடன் காதலா? விளக்கம் கொடுத்த ஸ்டாண்ட் அப் காமெடியன்.!

'சிறகடிக்க ஆசை' சீரியலில் எதிர்பார்க்காத வருகை..! இனி பாட்டியின் ஆட்டம் ஆரம்பம்..! 3

மேலும், “அப்படி முதலில் தனக்கு பேரன்களை கொடுப்பவர்களுக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனவும் அவர் கூறுகிறார். அது என்ன பரிசு? என்று அனைவரும் கேட்க, கிராமத்தில் எனக்கு சொந்தமான 2000 சதுர அடி நிலம் இருக்கிறது. அதை நான் முதலில் பிறக்கும கொள்ளுப் பேரன் பெயரில் எழுதி வைத்து விடுவேன்” என்று கூறுகிறார். இதனால் மனோஜ், முத்து, மீனா ஆகியோர் தங்களது மனைவிகளை பார்த்து வெட்கத்துடன் சிரிக்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment