தன்விக்காக பகையை மறந்து வந்த வேதா.! இதுதான் உண்மையான அன்பு.! அழகான ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ என்கிற சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தன்வியின் பள்ளியில் நடக்கும் விழா ஒன்றிற்கு பெற்றோர்கள் இருவரும் வரவேண்டும் என்று கூறுகின்றனர். வேதா வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் வேதா அங்கு வந்து விக்ரமுக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ என்கிற தொடர் வித்தியாசமான கதையம்சம் கொண்டது. திருமணமாகி தனது மகளுடன் வசித்து வரும் விக்ரமுக்கு எதிர் வீட்டில் இருக்கும் வேதா உடன் காதல் மலர்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்விக்காக பகையை மறந்து வந்த வேதா.! இதுதான் உண்மையான அன்பு.! அழகான ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

ஆரம்பத்தில் வேதாவுத்தும் விக்ரமுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில், பின்னர் அது காதலாக மாறியது. விக்ரமின் மகளான தன்விக்கும் வேதாவிற்கும் இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. தன்வி வேதாவை தனது சொந்த அம்மாவாக நினைக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தன்விக்காக விக்ரமையே வேதா திருமணம் செய்து கொள்கிறார். தற்போது கதைப்படி விக்ரமின் மாமாவான கைலாஷ் கெட்டவர் என்பதை அனைவரிடமும் நிரூபிக்க வேதா முயற்சி செய்கிறார். ஆனால் வேதாவை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விடுகின்றனர். வேதா தனது தாயாருடன் வசித்து வரும் நிலையில் தற்போது தன்வி தன்னுடைய பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு பெற்றோர்கள் இருவரும் வரவேண்டும் என்று கூறுகிறார்.

தொடர்புடையவை  குக் வித் கோமாளியில் நடந்த அதிரடி திருப்பம்.! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்.!

தன்விக்காக பகையை மறந்து வந்த வேதா.! இதுதான் உண்மையான அன்பு.! அழகான ப்ரோமோ இதோ 3
ஆனால் வேதாவின் தாயார் விக்ரமின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து மன்னிப்பு கேட்ட பின்பு வேதாவை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி விக்ரமை அனுப்பி விடுகிறார். இந்த நிலையில் வேதா வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தன்விக்காக வேதா பள்ளிக்கு வருகை தந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment