பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சரவண விக்ரம், அக்ஷயா உதயகுமார், மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர் தற்போது வெளிநாடு சுற்றுலாவிற்கு செல்கின்றனர். அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.! 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 7ன் முக்கிய போட்டியாளர்களாக இருந்தவர்கள்தான் ஜோவிகா விஜயகுமார், சரவண விக்ரம், அக்ஷயா உதயகுமார் ஆகியோர். இவர்களில் அக்ஷயா உதயகுமார் முதலிலேயே வெளியேறிவிட, சில நாட்களுக்குப் பின்னர் ஜோவிகா வெளியேறினார். பின்னர் 84 நாட்கள் தாக்கு பிடித்திருந்த சரவண விக்ரம் கடந்த வாரம் வெளியேறியிருந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.! 3
தனது வெளியேற்றத்தை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவரை வெளியேற்றி பிக் பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருந்தனர். ஆரம்பம் முதலே அமைதியான போட்டியாளராகவும் எந்த விஷயத்திலும் கருத்து சொல்லாமல் இருந்து வந்த அவர் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரை வெளியேற்றி பிக்பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ரசிகர்களுக்காக எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் எடுத்த அதிரடி முடிவு.! புது ப்ரோமோவை வெளியிட்ட சன் டிவி.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.! 5
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த உடனேயே அவர் தனது நண்பர்களான அக்ஷயா உதயகுமார், நிக்சன், ஜோவிகா விஜயகுமார் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து இருந்தார். உள்ளே எவ்வளவு விமர்சனமாக இருந்தாலும் வெளியே இவர்களின் நட்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சரவணன் விக்ரம், ஜோவிகா அக்‌ஷயா உதயகுமார் ஆகிய மூவரும் இணைந்து வெளிநாடு சுற்றுலாவிற்கு செல்லே இருக்கின்றனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.! 7
அவர்கள் எந்த ஊருக்கு செல்ல இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் விமான நிலையத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் வனிதா விஜயகுமார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், “மிஸ் யூ கைஸ் இன் பிக் பாஸ், நேர்மையா உண்மையா பழகுன பழக்கத்திற்காக தானா சேர்ந்த கூட்டம்” என்று சொல்லி அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

விளம்பரம்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய நண்பர்கள்.! 9
பிக் பாஸ் முடிவடைவதற்கு இன்னும் பத்து நாட்களே மீதம் இருக்கும் நிலையில் விடுமுறை முடித்துவிட்டு இவர்கள் மூவரும் பிக் பாஸ் இறுதி மேடைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வனிதா வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment