மீண்டும் இணைந்த மனங்கள்.! சக்தியின் உண்மையான அன்பை புரிந்து கொண்ட ஜனனி.! அழகான ப்ரோமோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி தற்போது சக்தியை புரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால் நெகிழ்ந்து போன சக்தி ஜனனியை கட்டி அணைத்துக் கொள்கிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் கடைசி தம்பியாக இருக்கும் சக்தி மெத்த படித்த ஜனனியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில நாட்களில் தனது அண்ணன் பேச்சை கேட்டுக்கொண்டு அவர் ஜனனியை வீட்டிலிருந்து அடித்து துரத்துகிறார். ஆனால் அங்கு இருக்கும் மற்ற மருமகள்களின் நிலைய யோசித்து மீண்டும் அந்த வீட்டிற்கே ஜனனி வந்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைந்த மனங்கள்.! சக்தியின் உண்மையான அன்பை புரிந்து கொண்ட ஜனனி.! அழகான ப்ரோமோ.! 1
அதன் பின்னர் சக்தி ஒரு கட்டத்தில் திருந்தி ஜனனியுடன் வாழ நினைக்கிறார். ஆனால் ஜனனி சக்திக்கு இடம் கொடுப்பதாக தெரியவில்லை. சக்தியை எப்பொழுதும் தள்ளியே வைத்திருந்தார். ஆனால் தான் எப்பொழுதும் உனக்கு ஒரு நண்பனாக இருப்பேன். உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தோள் கொடுப்பேன் என்று சொல்லி ஜனனிக்கு இத்தனை நாட்களாக ஆதரவாக இருந்து வருகிறார் சக்தி. இந்த நிலையில் தற்போது ஜனனியின் தந்தை நாச்சியப்பன் தனது மனைவியை விட்டு விட்டு, சொத்துக்காக சொந்த குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்து விடுகிறார். இதனால் ஜனனியின் தாயாரை அழைத்துக் கொண்டு ஜனனி குணசேகரன் வீட்டிற்க்கு வந்து விடுகிறார். இதை சக்தியின் தாயார் விசாலாட்சி கடுமையாக எதிர்க்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கெளதம் ஏமாற்றிய பெண்களின் பட்டியலை வாசித்த மஹா.! பீதியில் உறைந்து போன கெளதம்.!

மீண்டும் இணைந்த மனங்கள்.! சக்தியின் உண்மையான அன்பை புரிந்து கொண்ட ஜனனி.! அழகான ப்ரோமோ.! 3
ஆனால் தனது தாயை எதிர்த்து விட்டு ஜனனியின் தாயாரை சக்தி தங்களது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்கிறார். இதனால் நெகிழ்ந்து போகும் ஜனனி சக்தியை தற்போது புரிந்து கொள்கிறார். சக்தியுடன் அமர்ந்து பேசும் ஜனனி, “நீ என்னை ஒருமுறை காயப்படுத்தியதற்காக நான் உன்னை பலமுறை காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது நெகிழ்ந்து போகும் சக்தி ஜனனியை கட்டி அணைத்துக் கொள்கிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment