அர்ச்சனாவை Fake, நடிக்கிறார் என்று சொன்ன விசித்ரா..! மனம் உடைந்து அழும் அர்ச்சனா.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றையக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் தற்போது விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே பயங்கர சண்டை எழுந்திருக்கிறது. இன்று நடைபெற்ற மார்னிங் டாஸ்க்கில் விசித்ரா அர்ச்சனா பற்றி கூறியதை அர்ச்சனா ஏற்றுக்கொள்ளவில்லை. உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி விசித்ராவிடம் அர்ச்சனா கோபமாக சண்டை போடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனாவை Fake, நடிக்கிறார் என்று சொன்ன விசித்ரா..! மனம் உடைந்து அழும் அர்ச்சனா.! ப்ரோமோ இதோ 1
தற்போது விசித்ரா அர்ச்சனாவை பார்த்து, “ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாய். அதன் பின்னர் திடீரென நெகட்டிவாக மாறினாய். அதன் பின்னர் தற்போது ஓவராக நல்லவர் வேஷம் போடுகிறாய்” என்று சொல்லி பேசுகிறார். இதை சற்றும் எதிர் பார்க்காத அர்ச்சனா, “நீங்கள் என்னை இவ்வாறு பேசுகிறீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவில்லை” என்று சொல்லி விசித்ராவிடம் சண்டை போடுகிறார். மேலும் ஃபேமிலி டாஸ்க் வந்த பிறகு தான் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று உறுதியாக இருப்பதாக அர்ச்சனா கூறுகிறார். ஆனால் விசித்ரா விடாமல் அர்ச்சனாவை கேள்வி கேட்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகர் ரோபோ ஷங்கரின் 44வது பிறந்தநாள்.! ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா.!

அர்ச்சனாவை Fake, நடிக்கிறார் என்று சொன்ன விசித்ரா..! மனம் உடைந்து அழும் அர்ச்சனா.! ப்ரோமோ இதோ 3
“ஆரம்பத்திலேயே இதெல்லாம் உனக்கு தெரியாதா? ஆரம்பத்தில் மட்டும் சண்டை போட்டுவிட்டு இப்பொழுது அமைதியாக இருப்பது போல் நடிக்கிறாயா?” என்றெல்லாம் அர்ச்சனாவிடம் கேள்வி கேட்கிறார். இதனால் அர்ச்சனா மனம் உடைந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment