அனுமதி இல்லாமல் குடும்பத்தை வீடியோ எடுத்த ரசிகர்.! போனை பிடுங்கி அஜித் செய்த அதிர்ச்சி செயல்.!

துபாயில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமாரை அவரது அனுமதியில்லாமல் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் மொபைல் ஃபோனை பிடுங்கி வீடியோவை டெலிட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் நடைபெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்று இருக்கின்றனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடி வருகிறார் அஜித் குமார்.

அனுமதி இல்லாமல் குடும்பத்தை வீடியோ எடுத்த ரசிகர்.! போனை பிடுங்கி அஜித் செய்த அதிர்ச்சி செயல்.! 1
துபாய்க்கு வருகை தந்த தனது குடும்பத்தை படகில் அழைத்துச் சென்று வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் துபாயில் ரசிகை ஒருவருடன் அவர் நடனமாடிய வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது. அஜித் எங்கு சென்றாலும் அதை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அஜித்தை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, தனது அனுமதி இல்லாமல் வீடியோ எடுப்பதற்காக அஜீத் ரசிகர் மீது கோபப்பட்டு இருக்கிறார். தனது குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த அஜித்தை ரசிகர் ஒருவர் தூரமாக நின்று மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கார்த்தியை கபடியில் சுலபமாக சாய்த்து போட்ட அதிதி.. இந்த பொண்ணுக்குள்ள எவளோ திறமை இருக்கு

அனுமதி இல்லாமல் குடும்பத்தை வீடியோ எடுத்த ரசிகர்.! போனை பிடுங்கி அஜித் செய்த அதிர்ச்சி செயல்.! 3
அப்போது வேகமாக அங்கு வரும் அஜித்குமார் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் “போனை கொடுடா” என்று சொல்லி வாங்கி வீடியோவை டெலிட் செய்து விட்டு மீண்டும் அவரிடம் கொடுத்திருக்கின்றனர். அஜித்தின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இன்னும் சிலரோ அனுமதி இல்லாமல் ஒருவரை வீடியோ எடுப்பது தவறு, அதுவும் அவர் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் சமயத்தில் இதுபோல தொந்தரவு செய்யக்கூடாது என்று அஜீத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment