தனது பிறந்தநாளுக்கு அமெரிக்கா வரை வந்த குஷ்பூ, மீனாவுக்கு ட்ரீட் வைத்த நெப்போலியன்.! வீடியோ இதோ.!

நெப்போலியன் பிறந்த நாளுக்காக அமெரிக்கா சென்ற குஷ்பூ மற்றும் மீனாவிற்கு நெப்போலியன் பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த காணொளியை மீனா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர், தனது மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்றார். பின்னர் அடிக்கடி அமெரிக்கா வரை சென்று வர முடியவில்லை என்ற காரணத்தினால் அங்கேயே வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆகிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது பிறந்தநாளுக்கு அமெரிக்கா வரை வந்த குஷ்பூ, மீனாவுக்கு ட்ரீட் வைத்த நெப்போலியன்.! வீடியோ இதோ.! 1
அவ்வப்போது இந்தியா வந்து செல்லும் அவர், சில படங்களில் வில்லனாகவும் துணை வருடங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் ஹோம் டூர் வீடியோ மற்றும் பண்ணை வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. தொடர்ந்து சமீபத்தில் அவர் தனது 60வது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாடினார். இதற்காக குஷ்பூ மற்றும் மீனா இருவரும் அமெரிக்கா வரை சென்று அவருக்காக சர்ப்ரைஸ் செய்திருந்தனர். இந்த புகைப்படங்களை பகிர்ந்த நெப்போலியன், “குஷ்பு மற்றும் மீனா இருவரும் எனக்காக எவ்வளவு தூரம் வருவார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு நன்றி” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் குஷ்பூ மற்றும் மீனாவுக்கு அவர் விருந்து ஒன்றை வைத்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  படம் பார்த்தால் நமக்கு தங்கம் கொடுக்கும் விசித்திரன் படம்.....வசூலிற்காக நூதன முயற்சியில் விளம்பரம்.

தனது பிறந்தநாளுக்கு அமெரிக்கா வரை வந்த குஷ்பூ, மீனாவுக்கு ட்ரீட் வைத்த நெப்போலியன்.! வீடியோ இதோ.! 3

குடும்பத்துடன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர்கள் அங்கு உணவு சாப்பிடுவது போன்ற வீடியோ ஒன்றை மீனா பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. நெப்போலியன் குஷ்பூ இருவரும் இணைந்து ‘எட்டுப்பட்டி ராசா’ என்கிற படத்திலும், நெப்போலியன் மீனா இருவரும் இணைந்து ‘எஜமான்’ படத்திலும் நடித்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர்கள் மூவரும் இணைந்து இருப்பது ரசிகர்களுடைய மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment