சமீபகாலமாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்வுதான் நடிகர் பப்லு மற்றும் அவரது இளம் மனைவி ஷீத்தலின் பிரிவு. இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் மீண்டும் இணைந்து விட்டார்களோ? என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ப்ருத்விராஜ். இவருக்கு 57 வயதாகும் நிலையில் கடந்த ஆண்டு 24 வயது பெண்ணான ஷீத்தலை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்து வருவதாக கூறி அதிர வைத்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது என்று வீடியோக்களை வெளியிட்டு 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றி வந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கையில் திடீரென பிளவு ஏற்பட்டது. ஷீத்தல் ஒருநாள் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்திருந்தார். மேலும் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் லைக் செய்து அதை ஆமோதித்திருந்தார். தொடர்ந்து பேட்டியளித்து வந்த பப்லு, “தான் வாழ்க்கையில் பல முறை ஏமாந்து விட்டதாகவும், இனி ஏமாறாக தயாராக இல்லை” என வருத்தத்துடன் பேசியிருந்தார்.

இதனால் பப்லு மற்றும் ஷீத்தல் பிரிவு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பப்லுவுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை ஷீத்தல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘அனிமல்’ படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவை சந்தித்த இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது ஷீத்தல் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததால் தன்னுடைய கமெண்ட் பகுதியை முடக்கி இருக்கிறார் ஷீத்தல். இதனால் இவர்கள் உண்மையாகவே இணைந்து விட்டார்களா? அல்லது வேறு என்ன கதை? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
View this post on Instagram