குடித்துவிட்டு வந்து செம்ம அலப்பறை செய்யும் கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கோபி கம்பெனி திவாலாகி இழுத்து மூடிவிடுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகழன கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அவரிடம் ராதிகா உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய கம்பெனியை மூடியது குறித்து கோபி இன்னும் சொல்லாமல் மௌனம் சாதித்து வருகிறார். இந்த பிரச்சனையை எப்படி வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபி சொல்லப் போகிறார்? இதை ராதிகா தெரிந்து கொண்டால் எது போன்ற பிரச்சனைகள் நடக்கும்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு வந்து செம்ம அலப்பறை செய்யும் கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ இதோ.! 1
கோபி வேலை பார்த்து வந்த கம்பெனி கடன் பிரச்சனையால் மூழ்கிப் போகிறது. தொடர்ந்து கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கோபி கம்பெனியை இழுத்து மூடுகிறார். ஏற்கனவே பல பிரச்சனையில் இருக்கும் கோபிக்கு இது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவர் குடித்துவிட்டு தற்போது வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த அவர் அடுப்பங்கறையில் வெந்நீர் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் நெருப்பு எரியும் பக்கத்தை விட்டு விட்டு பக்கத்து அடுப்பில் வெந்நீர் காய்ச்சிக் கொண்டிருக்கிறார். இந்த கூத்தை எல்லாம் பாக்யாவும், ராதிகாவும் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா கோபியை தனியாக அழைத்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "இது பாசமலர் பார்ட் 2"!! சிவாங்கிக்காக தனியார் நிகழ்ச்சியில் பாடகராக மாறியுள்ள புகழ்!! வைரல் வீடியோ!!

குடித்துவிட்டு வந்து செம்ம அலப்பறை செய்யும் கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ இதோ.! 3
உங்களுக்கு என்ன பிரச்சனை? எதற்காக மீண்டும் குடிக்க தொடங்கி இருக்கிறீர்கள்? என்று ராதிகா கேட்கிறார். அதற்கு எனக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது என்று சொல்ல, கோபியை திட்டிவிட்டு ராதிகா செய்கிறார். அப்போது கோபி “கம்பெனியை இழுத்து மூடி விட்டார்கள் என்று சொன்னால் எனக்கு சங்கு தான்” என புலம்பி கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment