கிரிக்கெட்டில் ஏற்பட்ட சண்டை.! மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் – சாந்தனு.! ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரைலர் இதோ.!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கி வரும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சாந்தனு பாக்கியராஜ், அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியன், பிரித்திவிராஜன் மற்றும் இன்னும் பலர் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் ஏற்பட்ட சண்டை.! மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - சாந்தனு.! 'ப்ளூ ஸ்டார்' ட்ரைலர் இதோ.! 1
இந்தத் திரைப்படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ‘ரயிலின் மொழிகள்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து வெளியான ‘அரக்கோணம் ஸ்டைலும்’ பாடலும் ஹிட் அடித்தது. கோவிந்த வசந்தா இசையில் தெருக்குரல் அறிவு பாடிய இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் வருகிற ஜனவரி 2ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோ வெளியாகி இருக்கிறது. படத்தின் திரையரங்கு உருவத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பெண்களிடம் தோற்றுப்போன ஆண்கள்..!குதித்து கும்மாளம் போட்ட பெண்கள்..! Bigg Boss Promo..!

கிரிக்கெட்டில் ஏற்பட்ட சண்டை.! மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - சாந்தனு.! 'ப்ளூ ஸ்டார்' ட்ரைலர் இதோ.! 3

இந்த நிலையில் இன்று படத்தின் டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரெய்லரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment