வைரல் சோபா சிறுவனை தட்டி தூக்கிய விஜய் டிவி.! நீயா நானாவில் வந்த வைரல் சிறுவன்.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இணையத்தில் பிரபலமாக இருக்கும் சோபா விற்கும் பையனை தட்டி தூக்கி இருக்கிறது நீயா நானா குழு. இதை ரசிகர்கள் மேற்கோள் காட்டி கலாய்த்து வருகின்றனர். எதிர் எதிர் கருத்துக்களைக் கொண்ட நபர்களை அழைத்து வந்து அவர்களுக்குள் ஒரு விவாதம் நடத்தி ஒரு தீர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ‘நீயா நானா’ இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். கோபிநாத்துக்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைரல் சோபா சிறுவனை தட்டி தூக்கிய விஜய் டிவி.! நீயா நானாவில் வந்த வைரல் சிறுவன்.! ப்ரோமோ இதோ.! 1
எதிர் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்தால் கூட கோபிநாத் பொறுமையாக கையாளும் விதம் ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்துப் போனது. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், “என் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று சொல்லும் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள்” என்கிற தலைப்பில் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் இணையத்தில் மிக பிரபலமாக இருக்கும் சோபா விற்கும் பையனை தற்போது அழைத்து வந்திருக்கின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் தம்பி நீங்க எங்க? என்று கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீ வடிகட்டின முட்டாளா டா.! நீ எப்படி டா டாக்டர் ஆன? பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா.!

 

விளம்பரம்

சென்னையில் ‘நிஃப்யா பர்னிச்சர்’ என்ற சோபா கடையை நடத்தி வருபவரின் மகனாக இருக்கும் இந்த சிறுவன் பெருவெள்ளத்தின் போது, “பலர் வீட்டில் சோபாக்கள் வீணாகி இருக்கும் எனவே எங்களிடம் வந்தால் மிகக் குறைந்த விலையில் தரமான சோபா செய்து தருவோம்” என்று பேசி இணையத்தில் வைரலானார். அவர் தற்போது நீயா நானாவில் வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment