“ஒரு பொண்ணு முடிவெடுத்தா முடிவெடுத்தது தான்” ரட்சிதா வெளியிட்ட சூசக பதிவு.! இனி சேர வாய்ப்பே இல்லையா?

பிக் பாஸ் பிரபலம் ரட்சிதா மகாலட்சுமி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒரு பெண் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அது கடைசி வரைக்கும் ‘நோ’ தான் என்று அவர் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலமாக தினேஷ் உடனான வாழ்க்கைக்கு அவர் உறுதியாக ‘நோ’ சொல்லிவிட்டதாகவே தெரிகிறது. விஜய் டிவியின் பிரபல ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு முன்பாக ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தினேஷுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சில ஆண்டுகளாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

"ஒரு பொண்ணு முடிவெடுத்தா முடிவெடுத்தது தான்" ரட்சிதா வெளியிட்ட சூசக பதிவு.! இனி சேர வாய்ப்பே இல்லையா? 1
ரட்சிதாவிற்கு பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில், தினேஷிற்கு பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸுக்குப் பின்னர் தனது மனைவியுடன் இணைந்து வாழ்வேன் என்று தினேஷ் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். ஆனால் தினேஷுடன் இனி சேர வாய்ப்பே இல்லை என்பது போல ரட்சிதா தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் தினேஷ் தொடர்ந்து விசித்ராவை தாக்கி பேசி வந்த நிலையில், விசித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார் ரட்சிதா. மேலும் தினேஷ் உடன் வாழ்ந்த போது தான் பட்ட கஷ்டங்களை அனுபவித்தாக கூறி மறைமுகமாக அவர் பதிவுகளைப் போட்டு வந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'சிறகடிக்க ஆசை' சீரியலின் ஹிந்தி ப்ரோமோ வெளியானது.! சீரியலை டோட்டல் டேமேஜ் செய்துள்ள ஹிந்தி ரீமேக் .!

"ஒரு பொண்ணு முடிவெடுத்தா முடிவெடுத்தது தான்" ரட்சிதா வெளியிட்ட சூசக பதிவு.! இனி சேர வாய்ப்பே இல்லையா? 3
அதேபோல இன்றும் அவர் சில பதிவுகளை பகிர்ந்து இருக்கிறார் அதில், “தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கேர்ள் பிரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், பாலியல் தொழில் செய்பவராக இருந்தாலும், ஏன் மனைவியாக இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோ தான். “நோ மீன்ஸ் நோ” இது புரிஞ்சா சரி என்று பகிர்ந்து இருக்கிறார். இன்றுடன் பிக் பாஸ் சீசன் 7 நிறைவடைய இருக்கும் நிலையில், வெளியில் வந்து பார்க்கும் தினேஷிற்கு ரட்சிதாவின் இந்த பதிவுகள் பெயர் அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment