பிக்பாஸில் கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனி தற்போது மாயாவுக்கு பதிலடி கொடுத்து புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா வெற்றியாளராகவும், மணிச்சந்திரா இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். மூன்றாவது இடத்தை மாயாவும், நான்காவது இடத்தை தினேஷும், ஐந்தாவது இடத்தை விஷ்ணுவும் பிடித்திருந்தனர். வெற்றி பெற்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையுடன், ரூ.15 லட்சம் மதிப்பிலான வீட்டு மனை மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி மாயாவுக்கு பதிலடி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விஷயத்தில் மாயாவின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இதனால் மாயாவை ஜெயிக்க வைக்க கூடாது என்று பிரதீப் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து அவருக்கு எதிராக வாக்களித்து வந்தனர். இருந்தபோதிலும் மாயா விஜய் டிவியின் ஆதரவு காரணமாக மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் முடிந்திருக்கும் நிலையில் பிரதீப் ஆண்டனி மாயாவுக்கு கேள்வி கேட்டு ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அந்த பதிவில், “ஹாய் மாயா கிருஷ்ணன், லைஃப் எல்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பன்னு எனக்கு தெரியும்.

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய நட்பின் விலை ரூ.50 லட்சம். நான் அவ்ளோ ஒர்த்தே இல்லைன்னு நீ நெனச்ச..! அத நான் புரிஞ்சுக்கிறேன். உன் கூட விளையாடது நல்லா இருந்தது. செக்மேட்..! #அண்ணன் தாண்டி ராக் ஸ்டார்” என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து இருக்கிறார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போது விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் கூல் சுரேஷ் ஆகிய நான்கு பேர் மட்டுமே கொடுக்க மறுத்தவர்கள். அதில் அர்ச்சனா கூறும் பொழுது, “நான் பிரதீப்புடன் இருக்கும் பொழுது மிக பாதுகாப்பாகத் தான் உணர்கிறேன்” என்று சொல்லி ரெட் கார்டு கொடுக்க மறுத்திருந்தார். அதற்காகவே பிரதீப் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு வோட் செய்து அவரை வெற்றி பெற வைத்திருப்பதாக தெரிகிறது.
Hi @maya_skrishnan
Life laam epdi podhu? Nee nalla irupanu theriyum. Just wanted to say that the cost of my friendship is 50 Lacs🙏 Naan avlo laam worth illanu nee ninaicha, I understand 🤗 It was nice playing with you, Checkmate 💜#AnnanDhaandiRockstar https://t.co/cpoeXXiipx https://t.co/LAU2ma2dZC— Pradeep Antony (@TheDhaadiBoy) January 16, 2024