பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷை மேளதாளங்கள் முழங்க வரவேற்ற குடும்பத்தினர்.! வீடியோ உள்ளே.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இணைந்து வரவேற்று இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2010ம் ஆண்டு வெளியான ‘மகான்’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். அதன் பின்னர் 2011ம் ஆண்டு வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற நாடகத்தின் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் ‘புதுக்கவிதை’, ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’, ‘நாச்சியார்புரம்’, ‘ஈரமான ரோஜாவே 2’, ‘கார்த்திகை தீபம்’, ‘கிழக்கு வாசல்’ போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் ‘திருமணம் என்னும் நிக்கா’ என்கிற படத்திலும் இவர் குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷை மேளதாளங்கள் முழங்க வரவேற்ற குடும்பத்தினர்.! வீடியோ உள்ளே.! 1
தினேஷ் 2011ம் ஆண்டு ‘பிரிவோம் சந்திப்போம்’ நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு ஜோடியாக நடித்த ரட்சிதா மகாலட்சுமி உடன் காதலில் விழுந்தார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ரட்சிதா பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால் இவர்கள் திருமணத்தில் சில சிக்கல்கள் இருந்தது. இருந்த போதும் பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். இந்த செய்தி ரட்சிதா மகாலட்சுமி கடந்த பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருந்த போதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஒரு ஆம்பளைய எப்படி கைநீட்டி அடிப்ப?" ஈஸ்வரி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ஆதி குணசேகரன்.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷை மேளதாளங்கள் முழங்க வரவேற்ற குடும்பத்தினர்.! வீடியோ உள்ளே.! 3
ரட்சிதா இருந்தபோதே அந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே செல்ல தினேஷ் முயற்சித்தார். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசன் 7 முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் தினேஷ். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் நான்காவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்திருந்தது. டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது இடத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்று இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment