பொங்கல் பண்டிகையை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திரை பிரபலங்களும் தமிழர் திருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் 2000ம் ஆண்டு வெளியான ‘இங்கன ஒரு நீலபக்ஷி’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை சினேகா. முதல் படத்தில் இருபதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்காத போதிலும், அடுத்ததாக இவர் நடித்த ‘என்னவளே’ படம் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் சினேகா.

அதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் சினேகா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவரது சிரிப்பிற்காக இவர் ‘புன்னகை இளவரசி’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘ஆனந்தம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘பள்ளிக்கூடம்’ போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்திருந்தன.

தொடர்ந்து 2009ம் ஆண்டு ‘அச்சம் உண்டு அச்சமுண்டு’ என்கிற படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகர் பிரசன்னாவிற்கும் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு விஹான் மற்றும் ஆதிந்தியா என்கிற ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும், குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் தனது வீட்டில் நடக்கும் பூஜைகள் மற்றும் பண்டிகைகளையும் அவர் புகைப்படங்களாக எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நேற்று பொங்கல் தினத்தை அவர் சிறப்பாக கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்கள் குவிந்து வருகிறது. பலரும் சினேகாவிற்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O