நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து தங்களது சொந்த கிராமத்தில் இருக்கும் மாட்டு பண்ணையில் உள்ள மாடுகளுக்கு மாட்டுப்பொங்கலை கொண்டாடி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் அருண் பாண்டியன். இவர் 1986ம் ஆண்டு வெளியான ‘ஊமை விழிகள்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ‘இணைந்த கைகள்’, ‘ஊழியன்’, ‘நேரம்’, ‘அசுரன்’, ‘தாயகம்’, ‘ரோஜா மலரே’, ‘உரிமைப் போர்’, ‘ரிஷி’, ‘காற்றுக்கென்ன வேலி’, ‘தைரியம்’, ‘திருப்பதி’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘இன்பா’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்

குணச்சித்திர வேடம், வில்லன் வேடம் என பல வேடங்களில் அசத்தி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘ட்ரிகர்’ படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலும் இருந்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து 2011ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவருக்கு கவிதா பாண்டியன், கிராணா பாண்டியன், கீர்த்தி பாண்டியன் என்று மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகராக இருக்கும் அசோக் செல்வனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட அருண்பாண்டியன் தனது சொந்த ஊரில் பண்ணை ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில் இருக்கும் மாடுகளுக்கு நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.