“டாணா” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

"டாணா" படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 1

வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.வைபவ் நடிப்பில் ‘சிக்சர்’ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ‘காட்டேரி’, ‘லாக்கப்’, ‘டாணா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தற்போது ‘ஆலம்பனா’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளார் வைபவ்.

இதில் யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறது படக்குழு. ஆனால் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளது.

விளம்பரம்

இந்தப் படத்தில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘டாணா’ கதைக்களம் குறித்து வைபவ் கூறுகையில், “இம்முறை நந்திதா, யோகி பாபு, இயக்குநர் யுவராஜ் என முற்றிலும் புதிய கூட்டணி. ஆனால் எல்லோருமே நண்பர்கள்தான். படத்தில் சென்டிமென்ட், காதல், காமெடி என எல்லாவிதமான அம்சமும் இருந்ததால் கதை கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டேன்.

விளம்பரம்
தொடர்புடையவை  25 வருட திரை பயணம்..நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்..Yuvan Outstanding Performance On Stage

கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம். ஹீரோவுக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவனுக்கோ அவ்வப்போது பெண் குரலில் பேசுவது மாதிரியான ஒரு பிரச்சினை இருக்கும். இந்நிலையில் அவனது விருப்பம் என்ன ஆகிறது. அதைக் காதல், காமெடி கலந்து இயக்குநர் தொட்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் வைபவ்.

விளம்பரம்

Leave a Comment