விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பாலா. இவர் அதன் பின்னர் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது படங்களில் காமெடியனாக கலக்கி வரும் அவர் சிறிது காலம் விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார்.

தற்போது சினிமா, youtube சேனல், மக்களுக்கு சேவை செய்வது என்று கவனம் செலுத்தி வருகிறார் பாலா. தான் உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தையும் ஏழைகளுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, குடிநீர் தொட்டி அமைத்து கொடுப்பது, குடிநீர் சுத்திகரிப்பான் வாங்கிக் கொடுப்பது, வெள்ளத்தில் மக்களுக்கு உதவுவது என்று செலவிட்டு வருகிறார். இது போன்ற பல நல்ல விஷயங்களை செய்து வரும் பாலாவை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்காக ரசிகை ஒருவர் செய்திருக்கும் செயலை பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பாலாவின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண். அந்த புகைப்படத்தை பகிர்ந்த பாலா எமோஷனல் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “சமீபத்தில் இந்த அதிசய பெண்ணைப் பார்த்தேன். அவர் என்னுடைய பெயரை கையில் பச்சை குத்தியிருக்கிறார். நான் இதற்கெல்லாம் மதிப்பானவனா? என்று தெரியவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை மற்றும் என்னுடைய அன்புகள். மிக உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என்னுடைய காதலை சொல்லிக் கொள்கிறேன்.. உயிரே” என பதிவிட்டு இருக்கிறார். பதிவிட்ட ஒலு மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram