தனது தங்கையின் திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை சாய் பல்லவி நடனமாடி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி இருக்கிறது. குடும்பத்துடன் இணைந்து அனைவரும் நடனமாடி இருக்கும் காணொளியை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தமிழின் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சாய்பல்லவி செந்தாமரை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பல் மருத்துவம் படிக்க ஜார்ஜியா சென்ற அவர் படிப்பு முடிந்த பின்னர், ‘பிரேமம்’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி, தெலுங்கிலும் முண்ணனி நடிகையாக மாறி இருக்கிறார். தெலுங்கில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சாய்பல்லவியின் தங்கை பூஜா தனது அக்காவிற்கு முன்னதாகவே திருமணம் செய்ய இருக்கிறார். சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தி இருந்த பூஜா, இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாய் பல்லவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் பூஜா இன்று ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் திருமண நிச்சயதார்த்தத்தில் தனது சகோதரி சாய் பல்லவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பூஜா குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O