தமிழ் உலகின் முன்னணி நடிகரான ஆர்யா தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருக்கும் ஆர்யா, 2005ம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘நான் கடவுள்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. பின்னர் மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், சேட்டை, ராஜா ராணி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக கூட்டி இருக்கிறார் ஆர்யா. ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இளைஞர்கள் பலரும் ஆர்யா போல உடலமைப்பை மாற்ற ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O