“தினமும் சாமிகிட்ட வேண்டுவேன், ஆனா அது கடைசி வர நடக்காமலேயே போய்டுச்சு.!” வெங்கட் வீடியோ

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கட் ரங்கநாதன் தற்போது சோகமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து அவர் பேசியிருக்கிறார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். தான் ஒப்புக்கொண்ட கடைசி படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாக அவர் அறிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பலரும் விஜயின் சினிமா விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தினமும் சாமிகிட்ட வேண்டுவேன், ஆனா அது கடைசி வர நடக்காமலேயே போய்டுச்சு.!" வெங்கட் வீடியோ 1

விளம்பரம்

தொடர்ந்து விஜய் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் சிலரோ ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒருகால் என்று இல்லாமல் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராக வேண்டும் என்கிற தங்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட் ரங்கநாதன் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், “நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவுகள் இருக்கும். அந்த கனவுகளை நிறைவேற்ற தான் முயற்சி செய்து கொண்டிருப்போம். என் வாழ்க்கையிலும் அது மாதிரியான பல கனவுகள் இருக்கிறது.

தொடர்புடையவை  நீயெல்லாம் சக்திமானா? நேரா பொண்ணுங்கள்ட்ட போற? புகழை பங்கமாக கலாய்த்துவிட்ட பட்

"தினமும் சாமிகிட்ட வேண்டுவேன், ஆனா அது கடைசி வர நடக்காமலேயே போய்டுச்சு.!" வெங்கட் வீடியோ 3

விளம்பரம்

முக்கியமாக விஜய் அண்ணனுடன் இணைந்து ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான். அது நான் இரவு தூங்கப் போகும் போது கூட கடவுளிடம் வேண்டுவேன். எப்படியாவது ஒரு காட்சியில் நிற்பது போலவாவது நடித்து விட வேண்டும் என்று வேண்டுவேன் நேற்றும் வேண்டினேன். அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன். ஆனால் அது தற்போது நடக்காமல் போய்விட்டது” என்று பேசி இருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment