பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘திருமகள்’ சீரியலில் நடித்த நிவேதிதா தனது கணவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரித்து விட்டதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதே சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.! 1

விளம்பரம்

‘கல்யாணப்பரிசு’, ‘திருமகள்’, ‘சுந்தரி’ போன்ற சீரியல்ளில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதிதா. இவருக்கு ‘திருமகள்’ தொடர் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் பேரனான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பே ஆர்நனை நிவேதிதா பிரிந்து விட்டதாக தெரிகிறது.

பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.! 3

விளம்பரம்

இந்த நிலையில் ‘திருமகள்’ சீரியலில் நிவேதிதா உடன் நடித்த சுரேந்தர் என்பவருடன் காதலில் விழுந்துள்ளார். அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலையும் அறிவித்திருக்கிறார். சுரேந்தர் ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தார்.

தொடர்புடையவை  நிலா பாப்பா இங்க பாரு இவன் தான் சிடு மூஞ்சி பெரியப்பா.! செழியனை பங்கம் செய்த ஜெனி.!

பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.! 5

விளம்பரம்

அந்த சீரியலுக்குப் பின்னர் தற்போது ‘மலர்’ சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதிதாவிற்கு விவாகரத்து ஆன செய்தி தெரியாமல் ரசிகர்கள் பலரும் அவரை மோசமாக விமர்சித்து வந்தனர்.

பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.! 7

விளம்பரம்

இந்த நிலையில் நெட்டிசன்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “தனக்கும் ஆரியனுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது, யாரும் உண்மை தெரியாமல் மோசமான வார்த்தைகளில் பேச வேண்டாம், உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் SS ராஜேந்திரன் பேரனும், சீரியல் நடிகருமான SSR ஆர்யனை பிரிந்த நடிகை நிவேதிதா.! 9

விளம்பரம்

தற்போது தனது புது காதலர் சுரேந்தருடன் அவர் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

விளம்பரம்

Leave a Comment