விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்ருதி செய்த வேலையால் அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தை கடந்து அண்ணாமலை தற்போது மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். வீட்டிற்கு வந்த பின்னர் ஸ்ருதிக்கும், முத்துவுக்கும் மோதல் ஏற்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய எபிசோடில் ஸ்ருதி வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி ஸ்பிரே ஒன்றை வாங்கி வந்து வீடு முழுவதும் அடித்து விட்டு செல்கிறார். அந்த நெடி தாங்காமல் அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்படுகிறது. அவரை உடனடியாக மீனா மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இந்த செய்தியை மீனா முத்துவிற்கு ஃபோன் செய்து கூறுகிறார். மருத்துவமனைக்கு வரும் முத்துவிடம் பேசும் மருத்துவர், “கொசுக்காக அடித்த ஸ்ப்ரே அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை, கொஞ்சம் தாமதித்திருந்தால் உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்” என்று கூறுகிறார்.

பின்னர் அண்ணாமலையை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது ஸ்ருதி, “ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டாரே, அப்போ சின்ன ப்ராப்ளம் தானே” என்று கூறுகிறார். ஸ்ருதியின் பேச்சால் கடுப்பான முத்து, “ஏதும் பெரிய பிராப்ளம் ஆக வேண்டும் என்று நீ நினைத்தாயா” என்று சொல்லி ஸ்ருதியிடம் சண்டைக்குப் போகிறார். இனி ஸ்ருதி – முத்து சண்டை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television