சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது ‘மகான்’ திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விக்ரம் பல முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும், தயாரிப்பு நிறுவனம் அமேசான் ஓடிடி தளத்திற்கே படத்தை கொடுத்திருந்தனர். ஓடிடியில் வெளியானாலும் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது விக்ரம் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் ‘மகான் 2’ என்கிற கேப்ஷனை கேள்விக்குறியுடன் அவர் பகிர்ந்திருக்கிறார். இதனால் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து ‘மகான்’ படத்தின் பாகம் இரண்டில் நடிக்க இருக்கிறாரோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏற்கனவே ‘மகான்’ படத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீடை வைத்து தான் கார்த்திக் சுப்புராஜ் முடித்திருந்தார்.

எனவே தற்போது அவர் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்து விக்ரமிடம் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் போல் இல்லாமல் இரண்டாம் பாகம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முதல் பாகத்தைப் போலவே விக்ரம் துருவ் விக்ரம், சிம்ரன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியில் உள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..!
Mahaan2!!? 😉 pic.twitter.com/HTB3uyMtMm
— Vikram (@chiyaan) February 11, 2024
Twitter Original Source From: Vikram